Breaking News

Recent Posts

தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?

4.7.15 தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா? மும்பை நகரில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விழாக்களில் பொதுமக்கள் நடக்கும் நடைமேடை மற்றும் சாலைகளின் ஓரங்களில் பந்தல்கள் அமைக்கவும் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் மும்பை உயர்நீதிமன்றம் தடைவிதித் துள்ளது. மும்பையில் கடந்த 70 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரிவிழா நடந்து வருகிறது. தனிப்பட்ட நபர்கள் மற்றும் நகரின் சில அமைப்புகள் நடத்தி வந்த கணபதிவிழா கடந்த 30 ஆண்டு களாக ...

Read More »

பிராமணாள் போர்டு அழிப்புப் போராட்ட வரலாறு-முரளீஸ் கபே போராட்டத்தின் முகாந்திரம் என்ன?

4.7.15 பிராமணாள் போர்டு அழிப்புப் போராட்ட வரலாறு-முரளீஸ் கபே போராட்டத்தின் முகாந்திரம் என்ன? முரளீஸ் கபே போராட்டத்தின் முகாந்திரம் என்ன? பார்ப்பனர்களுக்கு இப்பொழுதெல்லாம் துளிர் விட்டுவிட்டதா? இடக்கு முடக்காக எல்லாம் பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர் – பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டனர். 58 ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறிவிட ஆசைப்படுகிறார்கள். திருச்சியில் 18.4.1957 அன்று கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில், ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் ...

Read More »

மனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள்-பெரியார்

3.7.15 மனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள்-பெரியார் மனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள் இந்த நிகழ்ச்சியானது வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி மாத்திரமல்லாமல் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் வழிசெய்யும் வகையில் அமைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் சற்றேறக் குறைய 2000, 3000-ஆண்டு காலமாக விவாகம், முகூர்த்தம், கல்யாணம் என்னும் பெயர்களால் பெண்களை அடிமையாக்குவதையே அடிப்படையாகக் கொண்டு திருமணங்கள் நடைபெற்று வந்தன என்பதோடு, ஜாதி இழிவை நிலைநிறுத்தவும், மக்களின் மூட நம்பிக்கை – மடமை – ...

Read More »

நான் இன்றைக்கே பகவான் இராமசாமியாக ஆகிவிட முடியுமே – பெரியார்

3.7.15 மக்கள் முன்னேற்றத்தைத் தடுப்பதே இந்து மதமும் ஜாதி முறையும்! பேரன்புமிக்க அவைத் தலைவர் அவர்களே! அன்புமிக்க கல்லூரி முதல்வர் அவர்களே! ஆசிரியர் பெருமக்களே! மாணவ நண்பர்களே! உங்கள் கல்லூரி மாணவர் யூனியனைத் துவக்கி வைக்க என்னை அழைத்து உள்ளீர்கள். இன்றைய தினம் உங்கள் கல்லூரியில் ஏதாவது பேச வேண்டும் என்று விரும்பி அழைத்தமை பற்றிப் பெரிதும் மகிழ்கின்றேன். நான் பேசும் முன் இந்தக் கல்லூரி உரிமையாளருக்கு என் சார்பாகவும், ...

Read More »

ஜாதி ஒழிப்பில் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்-பெரியார்

2.7.15 ஜாதி ஒழிப்பில் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்-பெரியார் ஜாதியை அடியுடன் ஒழிப்பதே எமது இலட்சியம்! காரைக்குடி நகரமன்றத் தலைவர் அவர்களே! துணைத்தலைவர் அவர்களே! அங்கத்தினர்களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றைய தினம் காரைக்குடி மாநகருக்கு இயக்கத் தொண்டு ஆற்ற வந்த இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நகராட்சி மன்றத்தின் சார்பாக என்னை வரவேற்று மனமானரப் புகழ் உரை கூறி வாழ்த்தி அருளியமைக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பிரதாய முறைப்படி நீங்கள் ...

Read More »

‘இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜ்’ ”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”- கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

கோகுல்ராஜ் கொலை’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ‘ஜாதி ஆணவக் கொலைச் சம்பவங்கள்’ தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவாகும்.

Read More »

நினைவு நாள் கொண்டாடுவது எதற்காக?-பெரியார்

1.7.15 நினைவு நாள் கொண்டாடுவது எதற்காக?-பெரியார் பன்னீர் செல்வம் நாள் – தந்தை பெரியார் தோழர்களே! பன்னீர்செல்வம் நினைவுநாள் என ஒரு நாளை நாம் கொண்டாடுகிறோம். எத்தனையோ பேர் தினம் சாகிறார்கள். ஏதோ இரண் டொருவர் களுக்குத்தான் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப்போனவர் களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமார்த்தியம் முதலியவைகளைப் பற்றியோ எவருக்கும் நாம் நினைவுநாள் கொண் டாடுவதில்லை. இவை காரணமாக ...

Read More »

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!

30.6.15 மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக! உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் படுகொலைகள் மதங்களால் மக்களுக்கு அமைதியில்லை – ஒற்றுமையில்லை! மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அழைப்பு! உலகம் முழுவதும் மதங்களின் பெயரால் படுகொலைகள் நடந்த வண்ணமே உள்ளன; மதங்களால் உலகில் அமைதி நிலவாது; ஒற்றுமை யும் ஏற்படாது. எனவே பகுத்தறிவுவாதிகளும், சமதர்மவாதிகளும் மத எதிர்ப்புப் ...

Read More »

பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா?-பெரியார்

ஜாதிக்குச் சட்டப் பாதுகாப்பு அளித்தது காந்தியே! 2500- ஆண்டுகட்கு முன் சித்தார்த்தர் ‘ஜாதி இல்லை’ என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியாளர்களின் மடங்களுக்குத் தீ வைத்தும், கொடூரமாகக் கொன்று குவித்தும், கழுவேற்றியும் ஒழித்துக்கட்டி விட்டார்கள். அதற்கு 500- வருடங்களுக்குப் பிறகு வள்ளுவர் சொன்னார். மிகவும் பயந்து “பிறப்பினால் எல்லோரும் ஒத்தவர்கள்” என்று சொன்னார். அந்தக் குறளைக் குப்பையில் போட்டுவிட்டார்கள். பகுத்தறிவாளர்கள் ஆகிய நாங்கள் அதை வெளிப்படுத்திய பிறகுதான் இப்போது ...

Read More »

தமிழும் தமிழர் முன்னேற்றமும்-பெரியார்

29.6.15 தமிழும் தமிழர் முன்னேற்றமும்-பெரியார் தமிழும்,தமிழர் முன்னேற்றமும் தந்தை பெரியார் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். மத சம்பந்தமற்ற ஒருவனுக்கு, தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக் கணம் கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது. உதாரணமாக மக்கள், ...

Read More »

பெண்ணடிமை நீங்க பெண்களே சம்பாதியுங்கள்-பெரியார்

27.6.15 பெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள் இந்த நிகழ்ச்சி பெருமளவில் நம் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாறுபாடாகத் தோன்றலாம். இந்த முறை ஏன் மாற்றப்பட்டது? இதற்கு முன் நமக்கு எந்த முறை இருந்து வந்தது? எந்தக் காலம் முதற்கொண்டு இருந்து வந்தது? இந்த முறையின் தன்மை என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எனது ஆராய்ச்சி எனக்குப் பல பெரிய புலவர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், நண்பர்களாக ...

Read More »

பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால்?-பெரியார்

26.6.15 பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால்?-பெரியார் பெண்களும், சர்க்கார் உத்தியோகமும்! ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சர்க்கார் உத்தியோகங்கள் எதிலும் இடம் கிடைக்க வேண்டும் என்பது பற்றி சென்னை சட்டசபையில் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. “சர்க்காரில் எந்தெந்த உத்தியோகங்களைப் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று விதியிருக்கிறது” என்று தோழியர் பீகம் அமிருதீன் கேட்ட கேள்விக்கு முதல் மந்திரியார் ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்திருக்கிறார். பெண்கள் எந்தெந்தத் தொழிலை ஏற்கத் ...

Read More »

ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?-பெரியார்

25.6.15 ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?-பெரியார் சோதிடம் – தந்தை பெரியார் இந்தியாவில் இந்துக்கள் என்ப வர்கள் சாமி ஆடுதல், வாக்குச் சொல் லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவை களைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ...

Read More »

சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம்-பெரியார்

25.6.15 சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம்-பெரியார் திராவிடர் கழகம் கட்சியல்ல: இயக்கம்!   பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த மயிலாப்பூர் திராவிட இளைஞர் கழகத்தின் சார்பாக பேசும்படி எனக்கு வாய்ப்பு அளித்த செயலாளர்களுக்கு எனது நன்றி. வரவேற்றுப் பத்திரம் வாசித்தளித்து புகழ்மாலை கூறியதற்காகவும் எனது நன்றி. அதிலே கூறியிருக்கிற புகழுக்குத் தகுதியற்றவன் ஆனாலும் உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடக்க முயற்சிக்கிறேன். இவ்வளவு ...

Read More »

திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்!-இராஜகோபாலாச்சாரியார்

24.6.15 திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்!-இராஜகோபாலாச்சாரியார் திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்! வியப்பாக இருக்கிறதா? உங்களுக்கு வியப்பாக இருக்கும்; இந்துத்வா பேர்வழிகளுக்கோ அதிர்ச்சியில் இருக்கும். வியப்பாயினும் அதிர்ச்சியாயினும் உண்மை இதுதான்! 31.05.1936இல் குற்றாலத்தில் காலை 9 மணிக்கு பட்டிணம் பொடி உரிமையாளர் தோழர் எஸ்.தங்கவேலுவுக்கும் மதுரை அய்யம்பாளையம் வியாபாரி கே.எஸ்.இராமசாமி பிள்ளையின் மகள் பூரணத்தமாளுக்கும் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் ...

Read More »