பரமக்குடியில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தையும், காவல் துறை வன்முறையையும், ஆதிக்க சாதியினரின் அடக்கு முறையையும் கண்டித்து இன்று (21.09.2011) சைதை பனகல் மாளிகை அருகில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று மே 17 இயக்கமும் , தமிழர் முன்னேற்ற கழகமும் சேர்ந்து நடத்தியது.

இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அதியமான், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, கீற்று ரமேஷ் , ஓவியர் சந்தானம் முதலியவர்கள் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர். பெருந்திரளான மக்கள் இந்த கண்டன கூட்டத்தில் பங்கேற்றனர்.

செய்தி மற்றும் படங்கள்: இராச்குமார் பழனிச்சாமி