அறுபது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு எந்த ஒரு இனமும் விடுதலை போராட்ட்த்தை விட்டு பின்வாங்கியதாக சரித்திரம் இல்லை நாமும் அவ்வாறே என்பதை உலகம் உணரட்டும். நம் விடுதலையை அறிவித்து விட்டு இந்தச் சர்வதேசச் சமூகம் தனது களங்கத்தை துடைக்கட்டும் என தமிழகத்தின் மே-17 இயக்கம் தனது பொங்குதமிழ் முழக்கத்தில் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியூ யோர்க்கில் இடம்பெற்ற பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வுக்கு அனுப்பிய பொங்குதமிழ் முழக்கத்திலேயே இதனைத் தெரிவித்திருந்தது.

ஈழவிடுதலைப் போராட்டம் குறித்தான விழிப்பையும் உறுதுணையையும் அறிவுசார் தளத்தில் முன்னகர்த்திச் செல்கின்ற தமிழக அமைப்புக்களில் ஒன்றாக மே-17 இயக்கத்தின் பொங்குதமிழ் முழுக்கத்தின் முழமையாக அறிக்கை :

எங்கள் அருமைத் தமிழர்களே

இன்று தமிழர் வரலாற்றில் இந்நாள் ஒரு முக்கிய நாளாய் மாறட்டும். இந்த நாளை நமது எதிரிகள் மறக்க இயலாத நாளாய் நாம் மாற்றுவோம்

நம் விடுதலை வெகு தொலைவில் இல்லை. நம் கண் எதிரே நின்றிருக்கும் இந்த ஐ.நா கட்டிடம் நம் முழக்கங்களாலும்இ போராட்டங்களாலும் அசைக்கப்பட்டால் நம் விடுதலை ஒரு நொடியில் நம் கைவசப்படும்.

இந்தச் சர்வதேசச் சமூகத்திடம் கேட்க வேண்டியக் கேள்விகளை கேளுங்கள்.
இந்த ஐ. நா கட்டிடத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் நாம் நினைவு படுத்துவோம் ‘எங்கள் சொந்தங்கள் தமிழீழத்தில் பலியிடப்பட்ட போது நீங்கள் அமைதி காத்தீர்கள் என்று மௌனமாக அங்கீகரித்தீர்கள் என்று நினைவுபடுத்துவோம். அவர்கள் மனசாட்சி அவர்களை கொல்லட்டும்.

இன்று இதோ அந்த கொடூரக் கொலைகாரன் ஐ.நா-வில் உங்கள் முன்னே அமர்ந்து எம் மக்களைக் கொன்றதைப் பற்றி வீர உரைகள் பேசுவான். இந்த கொலைகாரனிடம் சர்வதேசச் சமூகம் என்ன செய்யப்போகிறது எனக் கேளுங்கள். நம் முழக்கங்கள் இந்த கட்டிட்த்தின் அஸ்திவாரத்தை மட்டுமல்ல ஐ. நாவின் இரும்பு இதயத்தையும் பெயர்த்து எறியட்டும்.

30 ஆண்டுகால அமைதிவழி போராட்ட்த்தையும் புறக்கணித்தீர்கள் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்ட்த்தையும் மறுத்தீர்கள் எமது உரிமைகளை இதற்கு மேலும் புறக்கணித்தீர்கள் ஏன் என்றால் வரலாறு உங்கள் முகத்தில் இனி காறி உமிழும் என்று உரக்கச்சொல்லுங்கள்.

எமது விடுதலையை மறுத்து எம்மை மேலும் அடிமைத்தனத்திற்கு தள்ள முயலுவதாய் நாங்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறோம்இ என்று சொல்லுங்கள்

எங்களுக்கு நேர்ந்த இந்த இனப்படுகொலையை பற்றி எமது சந்ததியினருக்கு என்ன சொல்லப் போகிறீர்கள் எனக் கேளுங்கள்.

எம் சமூகத்தின் நேர்மையான போராட்டங்களுக்கு முன்பு இந்த சர்வதேச்சமூகம் ஒரு குற்றவாளியாய் கைகட்டி நிற்கிறதை எங்கள் குழந்தைகள் பார்க்கிறார்கள் எங்கள் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் எனக் கேளுங்கள்…

எமது விடுதலையை நீங்கள் உறுதிப்படுத்தாமல் உங்களின் மனசாட்சியை நாங்கள் நிம்மதியாய் உறங்க விடப்போவதில்லை எனச் சொல்லுங்கள்.

நம் விடுதலையை உறுதி செய்யும் கடமை சர்வதேச்சமூகத்திற்கு உண்டு. எம்மை கொலைசெய்தவரை
நீங்கள் விசாரித்து தண்டனை தருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதுவரை எமது விடுதலையை நீங்கள் தள்ளிப்போடுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று முகத்தில் அறைவதைப் போலச்சொல்லுங்கள். நம் விடுதலையை அறிவிக்க எத்தனை காலம் ஆகும் என கேளுங்கள்.

தமிழர்களே நாம் திமிருடன் நிற்போம். நம் பக்கத்தில் உண்மை இருக்கிறதுஇ நேர்மை இருக்கிறதுஇ எல்லாவற்றிற்கும் மேலாக வரலாறு நம் பக்கம் நிற்கிறது.

நம் எதிர்த்து நிற்பவர்களிட்த்தில் நேர்மை இல்லை உண்மை இல்லை இரக்கம் இல்லை. இந்த எந்த குணமும் இல்லாத சர்வேதச்சமூகம் நம் முன்னே மௌனமாக தனது குற்ற உணர்ச்சியுடன் நிற்கிறது
என்று நாம் உணர்வதை நாம் அவர்களுக்கு சொல்லியாக வேண்டும்.

எம் விடுதலையை உடனடியாக அறிவி என கட்டளையிடுவோம்.
எங்கள் விடுதலையை அங்கீகரிக்க தாமதம் செய்யாதே என உரத்துச் சொல்வோம்.

நமது ஒரே கோரிக்கை ‘தமிழீழ விடுதலையை அறிவி’ .
எங்கள் தாய்மண்- தமிழீழம் ஒரு சுதந்திர நாடு என அங்கீகரி’

இந்த முழக்கங்கள் விண்ணை பிளக்கட்டும். 60 ஆண்டுகால போராட்ட்த்திற்கு பிறகு எந்த ஒரு இனமும் விடுதலை போராட்ட்த்தை விட்டு பின்வாங்கியதாக சரித்திரம் இல்லை நாமும் அவ்வாறே என்பதை உலகம் உணரட்டும். நம் விடுதலையை அறிவித்து விட்டு இந்தச் சர்வதேச்ச் சமூகம் தனது களங்கத்தை துடைக்கட்டும்.

மறந்து விடாதீர்கள் தமிழர்களே ஆசியாவின் ஆகப்பெரும் சர்வேத இனமாக இன்று நாம் திகழ்கிறோம். நம்மின் ஆற்றல் இந்திய அரசைவிட வலிமையானது. சீனாவைவிட முக்கியமானது. நம் கைகள் இணைந்து இருக்கிறது நம் விடுதலை அறிவிக்கப்படுவதை ஐ.நா-வால் இனி தவிர்க்க இயலாது என உணர்த்துவோம் என மே-17 இயக்கத்தின் பொங்குதமிழ் முழக்கத்தில் தெரவிக்கப்பட்டுள்ளது.