ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமை மையத்தின் கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் இவ்வேளை சனல்-4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் ஜெனீவா நகரில் உள்ள பன்னாட்டு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

‘2009 மே போரின் இறுதி நாட்களில் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களும் அதன் பின்னரான​ இன்றைய​ தமிழ் பெண்கள் குழந்தைகளின் நிலை’ என்கிற​ தலைப்பின் பின் கீழ் இடம்பெற்ற அமர்விலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நாடு கடந்த​ தமிழீழ​ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியும் ‘பெண்கள் சிறுவர் முதியோர் நலம்பேணல்’ துணை அமைச்சருமாகிய ரஜனிதேவி.செல்லத்துரை அவர்களால் இத்திரையிடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
1 – ஜெனீவா பெண்கள் தகவல் மையம்
2 – பிரேசில் பெண்கள் மனித​ உரிமைகள் அமைப்பு
3 – ஜெனீவா அகதிகள் நலன்கள் அமைப்பு
4 – ஜெனீவா கத்தோலிக்க​ பெண்கள் அமைப்பு
5 – சுவீடன் பெண்கள் உரிமை அமைப்பு
6 – கொங்கோ பெண்கள் உரிமைகள் மையம்
7 – உகண்டா பெண்கள் அமைப்பு
8 – ஜெனீவா பல்கலாச்சார பெண்களுக்கான​ ​ இணைப்பு மையம்
9 – யூகோசிலவியா பெண்கள் அமைப்பு
ஆகிய அமைப்பு பிரதிநிதிகளுடன் இன்னும் பலர் மனித உரிமைவாதிகள் இந்த நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்

சிங்கள் பேரினவாத அரசின் தமிழின அழிப்பின் சாட்சியமாக விளங்குகின்ற ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் மனித உரிமைவாதிகளிடையே ஏற்படுத்திய தாக்கம் குறித்து துணை அமைச்சர் ரஜனிதேவி.செல்லத்துரை அவர்கள் நாதம் ஊடகசேவைக்க தெரிவிக்கையில் திரையிடலின் போது சில​ பிரதிநிதிகள் இவை மிகவும் கொடுமையான​ நிகழ்வுகளாக​ இருப்பதனால் தம்மால் தொடர்ந்து பார்க்க​ முடியாதிருப்பதனை குறிப்பிட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தார்கள் என குறிப்பிட்டார்.

மேலும் திரையிடலின் பின்னர் இடம்பெற்ற கருத்துப்பகிர்வின் போது தற்போதுள்ள நிலையை கேட்டறிந்தமை அவர்களின் அக்கறையை வெளிப்படுத்தியதோடு இதனை உலகம் கவனத்தில கொள்;ள வேண்டும் என்கிற​ ஆர்வத்தினை கூறினார்கள் எனவும் துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்திரையிடலின் போது ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நா.த.அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான பிரதிநிதி முருகையா சுகிந்தன் மற்றும் அரசியல் வெளிவிவகாரத்துறை துணைஅமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் ஆகியோர் ஆகியோர் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நாதம் ஊடகசேவை