முகநூலினால் (Facebook) என்ன பயன்? வெறும் வெட்டியாக வேலையில்லாமல் அரட்டை அடிப்பதை தவிர என கேட்கும் நண்பர்களே இதை பாருங்கள் . பெசன்ட் நகர் கடற்கரையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கையெழுத்து பரப்புரைக்கு முகநூலில் மட்டுமே அறிமுகமான தோழர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் அணு உலை இப்பிரச்சனையை எடுத்துச் சென்றனர் . ஆயிரம் கையெழுத்துக்கள் சில மணி நேரங்களில் வாங்கி சாதனை செய்து விட்டனர் நம் முகநூல் தோழர்கள் . இதில் முதல் முறை களத்திற்கு வந்த தோழர்கள் அதிகம். இதில் கலந்து கொண்டு தங்கள் இனத்தின் மீதான அக்கறையை காட்டிய தோழர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்திய அணு உலைக்கு எதிரான கையெழுத்து பரப்புரை பெரும் வெற்றி பெற்றது . மேல் தட்டு மக்களையும் சிந்திக்க வைத்து , அவர்களுடன் வாதம் செய்து அவர்களையும் அணு உலைக்கு எதிராக கையெழுத்தையும் போட வைத்தனர் நம் தோழர்கள். முழுவதும் நம் முக நூல் தோழர்களே சமுதாய அக்கறை கொண்டு களத்தில் வந்து பெரு முயற்சி எடுத்து ஆயிரம் கையெழுத்து பெற்றனர். வெளிமாநிலத்தவர், உள்நாட்டினர் ,மற்றும் வெளிநாட்டினரும் விரும்பி தம் கையெழுத்தை பதிவு செய்தனர் என்பது குறிப்பிட தக்கது . மக்களின் பெரும் ஆதரவு நமக்கு கிடைத்தது மகிழ்ச்சியே. களத்தில் வந்து தங்கள் கடமையை ஆற்றிய தோழர்கள் அனைவருக்கும் நம் பாராட்டுக்கள்.

மேலும் பல ஆயிரம் கையெழுத்துக்கள் பெற்று கூண்டங்குளம் போராட்ட குழுவிற்கும், தமிழக முதல்வருக்கும், இந்திய அரசிற்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

நன்றி

ராஜ்குமார் பழனிசாமி
முகநூல் நண்பர்கள் மற்றும்
தமிழர் பண்பாட்டு நடுவம்.

>