Home / featured / பிப்.26 – சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு – தமிழர்களே தலைநகரில் ஒன்றுகூடுவோம்

பிப்.26 – சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு – தமிழர்களே தலைநகரில் ஒன்றுகூடுவோம்

கூடங்குளம் மக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் பிப்ரவரி 26 ஆம் நாள் ஞாயிறன்று சென்னையில் மக்கள் திரள் மாநாடு ஒன்றைக் கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் அனைத்து சக்திகளின் ஒருமித்த ஆதரவோடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு அமைப்புகளின் சார்பாக கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஜனவரி 21 ஆம் நாள் சனிக்கிழமை திருச்சி அய்கஃப் அரங்கில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 ஆம் நாள் அய்கஃப் அரங்கில் மீண்டும் கூடிய தெரிவு செய்யப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் ஒரு மனதாக எடுக்கப் பட்டன.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டு முதன்மை ஒருங்கிணைப்பாளராக செயல் படுவார்.

மாநாட்டுக் குழுவில் இடம் பெறுவோர்: கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், கண குறிஞ்சி (மக்கள் சிவில் உரிமைக் கழகம்), சோழ நாடன் (தமிழ்நாடு மக்கள் பேராயம்), குணா (பொதுமையர் பரப்புரை மன்றம்), அருண்சோரி (தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை), பொன் சந்திரன் (அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம்), ஜெயபிரகாஷ் நாராயணன் (தமிழர் குடியரசு முன்னணி), தபசி குமரன் (பெரியார் திராவிடர் கழகம்), சதீஷ் (தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை), தங்கத் தமிழ்வேலன் (இ.க.மா.லெ. மக்கள் விடுதலை), அண்ணாமலை (பெரியார் திராவிடர் கழகம்).

நிதிக் குழு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், கோ. திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), எஸ்.ஆர். இராமலிங்கம் (அயோத்திதாசப் பண்டிதர் ஆய்வு நடுவம்), அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்), பொன். சந்திரன் (அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம்), மோகன்ராஜ் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), குணா (பொதுமையர் பரப்புரை மன்றம்), திருமுருகன் (மே 17 இயக்கம்), பூங்குழலி (தென்செய்தி), கண்ணன் (மாநாட்டு நிதிக் காப்பாளர் – தமிழ்நாடு மக்கள் பேராயம்) ஆகி யோரைக் கொண்ட நிதிக்குழு அமைக்கப்பட் டுள்ளது.

அரங்கக் கருத்தரங்கிற்கு தலைமை மனோ தங்கராஜ் (அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்).

காலை 9 மணிக்கு சமர்ப்பா குமரன் எழுச்சிப் பாடல்கள். காலை 10 மணிக்கு கருத்தரங்கு.

நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் – இந்தியா, மக்கள் சிவில் உரிமை கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும்,

தமிழேந்தி (மார்க்சிய-பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி), பானுமதி (மக்கள் உரிமைப் பேரவை-தமிழ்நாடு), மருத்துவர் புகழேந்தி (சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு), மருத்துவர் ரமேஷ் (சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு), கே.எம். செரீப் (தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி), செல்வமணியன் (தமிழ்நாடு பொது வுடைமைக் கட்சி), பி.டி.சண்முகம் (இ.பொ.க.மா.லெ.), கண்ணன் (தமிழ்நாடு மக்கள் பேராயம்), எழிலன் (தமிழர் எழுச்சி இயக்கம்) ஆகியோர் கருத்தரங்கில் பேசுகிறார்கள்.

தமிழக குடியரசு முன்னணி ஜெயப்பிரகாசு நாராயணன் நன்றியுரையாற்றுகிறார்.

திருமதி சுந்தரி (அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம்) தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் பேரணி தொடங்குகிறது. கோ. திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்) பேரணியை தொடங்கி வைக்கிறார். காஞ்சி மக்கள் மன்றத்தின் இசை முழக்கம் பேரணியில் இடம் பெறுகிறது.

மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு கழத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகிறார். முரசு கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அருண்சோரி (தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை) வரவேற்புரையாற்றுகிறார்.

கருத்துரையாற்றுவோர்: வைகோ (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்), பழ. நெடுமாறன் (உலகத் தமிழர் பேரமைப்பு), மருத்துவர் இராமதாசு (பாட்டாளி மக்கள் கட்சி), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), தியாகு (தமிழர் தேசிய இயக்கம்), சுப. உதயகுமார் (அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம்), கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி (இந்திய சோசலிஸ்ட் சனநாயகக் கட்சி-தமிழ்நாடு), கி. வெங்கட்ராமன் (தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சி), அரங்க குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்), மீ.த. பாண்டியன் (இ.பொ.க.மா.லெ. மக்கள் விடுதலை), சந்திரபோசு (தியாகி இமானுவேல் பேரவை), நிலவன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), செல்வி (மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி).

செந்தில் (சேவ் தமிழ்ஸ்) நன்றி கூறுகிறார்.

தலைநகரம் நோக்கி தமிழினம் குவியட்டும்

பிப். 26 இல் சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு.

மக்களுக்கு எதிராக அணுஉலைத் திட்டத்தை திணிக்க துடிக்கிறது மத்திய காங்கிரஸ் ஆட்சியும் பார்ப்பன இந்துத்துவ சக்திகளும்.

போராட்டக் குழுவினர் தாக்கப்படுகின்றனர்.

துக்ளக், தினமலர், ஆர்.எஸ்.எஸ். , பா.ஜ.க., பார்ப்பன சக்திகள், அணு உலைக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் –

மக்கள் குரலை ஒலிக்க

அதிகார மிரட்டலுக்கு அடிபணியோம் என்பதை அறிவித்திட –

தலைநகரில் திரளுவோம்!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்தும் மாநாட்டுக்கு –

தமிழர்களே, திரண்டு வாரீர்!

About பெரியார்தளம்

Check Also

DeathSentence_PTI

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர்

உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>