பெரம்பலூர் மாவட்டத்தில் விகளத்தூரை அடுத்துள்ள திருவாளலந்துறை கிராமத்தில் முதல் முறையாக ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டிய தேர்திருவிழாவில் ஏரளமானோர் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து கிராமத்திலிருக்கும் அம்பேத்கர் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்தல், பால் அபிசேகம், அம்பேத்கர் நமக்கு கிடைத்த பொக்கிசம் என்கிற தலைப்பில் கருத்தரங்கம், மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், மற்றும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த எல்லா நிகழ்வுகளிலும் பெண்கள் தங்கள் குடும்ப விழாவாக கொண்டாடியதுதான் மிக மகிழ்ச்சியான மனநிறைவான நிகழ்வாக இருந்தது. அந்த ்புகைப்பட இணைப்பை தங்களுக்கு சம்ர்ப்பிக்கிறோம்..