தமிழர் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் மற்றும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று(30.04.2012) மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் புதுச்சேரி தலித் சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினர் சாதி ஒழிப்பு, மக்கள் விடுதலை, ஈழ விடுதலை இசைப்போர் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வானது தோழர் பா.செல்வக்குமார் தலைமையில், தோழர் சு.பிரகாசு முன்னிலை வகிக்க பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமத், பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திராவிட இயக்க நூற்றாண்டான இன்று திராவிடர் இயக்க போராட்டத்தால் முன்னேறிய பலர் திராவிடர் இயக்க செயல்பாட்டை மறந்துவிட்டும் மறைப்பதற்கும் முயற்சித்து வருகின்றனர். திராவிடம் தான் தமிழர் விடுதலைக்கு எதிரானதாகவும், ஈழத்தமிழர் அழிவுக்கு காரணமே திராவிடர் இயக்கம்தான் என்று மேடையில் பேசி இந்தியப் பார்ப்பனிய அரசுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தெளிவினையும் வரலாற்றையும் அளிக்கும் வகையில் இப்பொதுக்கூட்டத்தில் அனைவரும் விளக்கமாக உரையாற்றினர்.

காணொளிகள்:
வன்னிப்பெருநிலமே வரலாற்றுச்சிறப்பிடமே…
வீரச்சமர் நடந்த எங்கள் விடுதலைப்புலிக்களமே…
பாடுபவர்: புதுவை தலித் சுப்பையா
YouTube Preview Image

தோழர் கொளத்தூர் மணி உரை:

YouTube Preview Image

தோழர் விடுதலை க.இராசேந்திரன் உரை:

YouTube Preview Image

தோழர் அப்துல் சமத் உரை:

YouTube Preview Image

தோழர் அன்பு தனசேகரன் உரை:

YouTube Preview Image

நிகழ்வில் பாடப்பட்ட இதர பாடல்களின் காணொளி:

http://youtu.be/yaqtWrUrXDc

http://youtu.be/3n2aU5ChKOk