நீலகிரியில் நடந்த மாபெரும் கண்டனக் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு “தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆட்களின் வன்முறை அடாவடியை எதிர்த்து ‘மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’”

கெலமங்கலம் ஒன்றியம், நீலகிரியில் கழகத் தோழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம், கிருட் டிணகிரி மாவட்டம் கெலமங்கலத் தில் 28.4.2012 மாலை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் பழனிச் சாமி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன், கழக வழக்கறிஞர் குமார தேவன், மாவட்டத் தலைவர் குமார், தருமபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப் பன் ஆகியோர் கண்டன உரையாற் றினர்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரன்

இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களால் தொடர்ந்து நடந்தேறி வரும் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டிருந்த பொது மக்கள் பெருமளவில் திரண்டு கண்டன உரைகளை உற்சாகமாக வரவேற்று கையொலி எழுப்பியும் ஆரவாரம் செய்தும் தமது ஆதரவைத் தெரிவித்தனர். 6.4.2012 அன்று நீலகிரிக்கு அருகே கோவில் திருவிழா வில் ஏற்பட்ட தனி நபர்களின் சிறு சச்சரவைச் சாக்காக வைத்து, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சந்திராம்மாவின் கணவர் வெங்கட் ராஜி மற்றும் அவரது மகனும், கழகத் தோழருமான மாருதி, அவரது இரு சகோதரர்களையும் சட்டமன்ற உறுப்பினரின் அண்ணனும் அவரது அடியாட்களும் நான்கைந்து வாகனங்களில் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். ஊர்ப் பொது மக்களும், கழகத் தோழர் களும் அந்த வன்முறைக் கும்பலை விரட்டி யடித் துள்ளனர். அதன் பின்னர் தாக்குதலுக் குள்ளானவர் களை ஓசூர் மருத்துவ மனையில் சேர்க்கச் சென்ற போது விடியற்காலை 3 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் இராமச் சந்திரனே நேரில் அடியாட் களுடன் வந்து மீண்டும் தாக்கினர். இதில் மேலும் மூன்று பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கள் வன்முறையால் அந்த வட்டா ரத்தையே மிரட்டி வந்த அந்த வன் முறையாளர்களின் செயல்பாடுகளை யும், அவர்களுக்கு உடந்தையாக வழக்குகளைத் திரித்து பதிவு செய் திருக்கிற காவல்துறை கருப்பு ஆடு களின் நடவடிக்கைகளையும் கண்டித்து அனைவரும் உரை யாற்றினர்.

மேலும் கழகத் தலைவர் தமது உரையின் இறுதியில், பாதிக்கப்பட்ட அனைத்து அமைப்பு மற்றும் கட்சிகளும் சேர்ந்து, “மக்கள் பாது காப்பு கூட்டமைப்பு” ஒன்றை உரு வாக்க வேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைத்தபோது, மக்கள் கூட்டம் வரவேற்று கையொலி எழுப் பியது, உணர்ச்சிகரமாக இருந்தது.

மிரட்டலுக்கு பயந்து கிடந்த மக்கள், அச்சத்தை உதறிவிட்டு, 1500-க்கும் அதிகமானோர் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக திரண்டது, அப்பகுதியில் பலராலும் வியந்து பேசப்படுகிறது.
– நமது செய்தியாளர்