Home / featured / சேலம் ஓமலூரில் நடைபெற்ற நாத்திகர் விழா [படங்கள்]

சேலம் ஓமலூரில் நடைபெற்ற நாத்திகர் விழா [படங்கள்]

சேலம் மாவட்டம் ஓமலூரில், 26-5-2012 சனிக்கிழமை அன்று மாலை 4-00 மணி முதல் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, நாத்திகர் விழா மற்றும் மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஓமலூர் செவ்வாய் சந்தையில் இருந்து, பறை முழக்கத்துடன் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி பேருந்து நிலையம் வரை எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணியின் முன்பே நங்கவள்ளி அன்பு அவர்கள்,  மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி வருவதையும், அதன் நோக்கத்தையும் ஒலி பெருக்கியின் மூலமாக அறிவித்துக்கொண்டு வந்தார். பேரணியில் பெண்கள்  தீச்சட்டிகளை எடுத்துக்கொண்டனர்.

குழந்தைகளெல்லாம் உடல் முழுவதும் ஊசிகளை குத்தி அதில் எழுமிச்சை பழங்களை தொங்கவிட்டு வந்தனர். சிந்தாமணியூர் ஜெயபிரகாஷ் கன்னத்தில் அலகு குத்தி வந்தார். தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன் மற்றும் கோவிந்தபாடி சென்னியப்பன் ஆகியோர் முதுகில் அலகு குத்தி ஒரு ஆம்னி வேனையும் , அம்மாபேட்டை செந்தில் மற்றும் இளம்பிள்ளை தனசேகர் ஆகியோர் முதுகில் அலகு குத்தி ஒரு ஆம்னி வேனையும் இழுத்துவந்தனர். இளம்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் கொளத்தூர் அய்யனார் ஆகியோர் பறவைக் காவடி அலகு குத்தி உயரத்தில் தொங்கி வந்தனர். எருமாபாளையம் கலைவாணன், தலையில் தீயை எரியச் செய்து அதன் மீது ஒரு பாத்திரத்தில் பால் காய்ச்சி, இதற்கும் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மக்களிடையே விளக்கி வந்தார்.

omalur_pdk_26052012_periyarthalam-1

Picture 1 of 29

நங்கவள்ளி இராசேந்திரன் ஆனிப்படுக்கையில் படுத்துவந்தார். கிணத்துக்கடவு
நிர்மல்குமார் கத்தி (அரிவாள்) யின்  மீது நின்று கான்பித்து வந்தார்.
கழக தோழர்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒலி முழக்கங்களை எழுப்பி
வந்தனர். முதன் முறையாக இந்த பகுதியில் நடைபெறும் இந்த பேரணியை ஆர்வமுடன்
பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர்.  இளம்பிள்ளை சந்திரசேகர்,
பார்த்திபன் ஆகியோர் தீச்சட்டிகளை தயார் செய்து வந்தனர்.  கோவை வடக்கு
மாவட்டத் தலைவர் சென்னிமலை இராமசாமி, கோவை நகர கழகப் பொருப்பாளர் கோபால்,
இரஞ்சித் பிரபு ஆகியோர் தலைமையில் வந்திருந்த குழுவினர், தோழர்களுக்கு
அலகுகளை குத்திவிட்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியை வழிநடத்தினர்.

மாலை 6-00 மணிக்கு ஓமலூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம்
நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு மற்றும் சாதி
ஒழிப்பு பாடல்களுடன் துவங்கிய இந்த பொத்துக்கூட்டத்திற்கு சேலம் கிழக்கு
மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமையேற்றார். போலிச்சாமியார்களின்
மோசடிகளை விளக்கியும், மூடநம்பிக்கைகளை நகைச்சுவையுடன்
எடுத்துக்கூறியும், மந்திரமில்லை தந்திரமே என்ற தந்திர நிகழ்ச்சிகளை
தோழர் சிற்பி இராசன் அவர்கள் செய்துகாட்டினார். தோழர் சிந்தாமணியூர்
பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சிற்பி இராசன் அவர்களின்
நிகழ்சியின் இடையிடையே, மேற்கு மாவட்டத் தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட
அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெரியப்பட்டி
அன்பரசன் ஆகியோரும் உரையாற்றினார்கள். ஆரம்ப காலங்களில் இந்த ஓமலூர்
பகுதியில், பல பெரியார் இயக்க கூட்டங்கள் நடைபெற்றுள்ளது, பல முக்கிய
தலைவர்கள் பேசியிருக்கிறார்கள், ஆனாலும் அவைகளை விட, அதிகமான
கூட்டத்தையும், பகுத்தறிவு விளக்கத்தையும் தற்போது பார்ப்பதில், வியப்பாக
இருப்பதாக கூறிய தலைமை ஆசிரியர் அன்பரசன் அவர்கள் கழகத்தின்
செய்ல்பாடுகளை பாராட்டிப் பேசினார். கழகத்தலைவர்  தோழர் கொளத்தூர் மணி
அவர்கள் மனுதர்ம எரிப்பு போராட்டம் ஏன் என்பதை விளக்கி சிறப்புரை
ஆற்றினார். மீண்டும் சிறிது நேரம் சிற்பி இராசன் அவர்கள் நிகழ்ச்சிகளை
நடத்தி, இப்படிதான் சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள் என்று விளக்கமும்
அளித்தார். சிந்தாமணியூர் இரவி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவடைந்தது.
தோழர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

About பெரியார்தளம்

Check Also

DeathSentence_PTI

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர்

உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் ...

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>